சிவகாசி: பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்...

70பார்த்தது
சிவகாசியில் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 50, 000 அபராதம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சி 48 வார்டு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பைகள் பயன்படுத்துதல் மற்றும் தயாரித்தல் ஆகியவைகளுக்கு ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழு மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 2வது மண்டலம் பதுவைநகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு மற்றும் நெகிழி பைகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வைத்திருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி மாநகராட்சி உரிமம் இல்லாமல் அந்நிறுவனம் செயல்பட்டு வந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அந்நிறுவன உரிமையாளருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்துவது மற்றும் தயாரிப்பு செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக மாநகராட்சி பொது சுகாதார விதிகள், நெகிழி கழிவு மேலாண்மை விதிகள் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுமென்றார்.

தொடர்புடைய செய்தி