2026ல் நடக்கின்ற போர் அதிமுக திமுக தான் முன்னாள் அமைச்சர்..

85பார்த்தது
2026ல் நடக்கின்ற போர் அதிமுகவுக்கும்- திமுகவுக்கும் தான். பாஜகவோ! காங்கிரஸோ!! களத்தில் இல்லை எனவும் ஆவேசம்.
சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கே. டி. ராஜேந்திரபாலாஜி.
விருதுநகர் மாவட்டம்,
2026ல் நடக்கின்ற போர் அதிமுகவுக்கும்- திமுகவுக்கும் தான். பாஜகவோ! காங்கிரஸோ!! களத்தில் இல்லை எனவும் ஆவேசம்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் அதிமுக 53 -ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது: - அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, படத்தில் நடித்துக் கொண்டு நினைத்தவுடன் கால்சீட் கொடுத்தபோல் கொடுக்கும் வசனத்தை பேசிக்கொண்டு போகும் கட்சி அதிமுக கிடையாது,
இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்ஜிஆர் தான் தான் என்கின்றனர், நான்தான் முதல்வர் என்கிறார்கள், ஒருக்காலமும் அது நடக்காது, இது திராவிட பூமி, இங்கு நீதி கட்சி திக, அதிமுக, திமுக இதுதான் தமிழகத்தின் நிலைமை தான் என்றார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நடக்கின்ற போர்வார் என்பது அதிமுகவுக்கும்- திமுகவுக்கும் தான். பாஜகவோ காங்கிரஸும் களத்தில் இல்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால் தான் மட்டுமே முடியும். திமுகவில் பரம்பரை வாரிசு அரசியல் என்ற கலாச்சார சீர்கேடு உள்ளது என்றார். மேலும் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாநகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி