சாத்தூர் - Sattur

சாத்தூர்: சரவெடி தயார் செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே செவல்பட்டியில் அகத்தியன் என்ற பெயரில் அலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக செயல்படுவதை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் தனி குழு அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அதன் பேரில் செவல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வெள்ளை பாண்டியன் தலைமையில் ரோந்து பணி செய்யும்போது செவல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியன் பட்டாசு ஆலையில் சோதனை செய்யும் போது உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். தயார் செய்த சரவெடிகளை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைபாண்டியன், வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் அந்தோனி செல்வராஜ் மீது புகார் அளித்ததின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்துார் : லாட்டாரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது
Oct 18, 2024, 16:10 IST/ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்துார் : லாட்டாரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது

Oct 18, 2024, 16:10 IST
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மடார்வளாகம் கோவில் அருகே இருக்கும் பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் ஸ்ரீவில்லிபுத்துார் நம்பி நாயுடு தெருவை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் முத்து கருப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் நம்பர் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.