

விருதுநகர்: அரசு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்க்கரை தாஸ் (58) பாலியல் தொல்லை அளித்ததாக பெண் காவலராக பணியாற்றி வரும் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்க சென்ற தாய், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என ஆசிரியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி மாணவியிடம் மீண்டும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். மனவேதனை அடைந்த அந்த மாணவிகள் 4 பேர் சேர்ந்து 1098 சைல்ட் லைன் புகார் தெரிவித்தார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தலைமை ஆசிரியர் மீது அளித்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சர்க்கரை தாஸ் அங்கு பயிலும் பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுதல், பாலியல் தொந்தரவு அளிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து எனது மகள் உட்பட நான்கு மாணவிகள் 1098 சைல்ட் லைன் எண்ணில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.