விக்கிரவாண்டி - Vikravandi

விழுப்புரத்தில் 23 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

விழுப்புரத்தில் 23 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் சாலை அகரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முதல்வர் மருந்தகத்தை வனம், கதர் கிராமத் தொழில்கள்துறை அமைச்சர் க. பொன்முடி குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் 22 இடங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் சார்பிலும், திருவெண்ணெய்நல்லூரில் தொழில்முனைவோர் ஒருவர் சார்பிலும் என 23 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.  மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது. மருந்தகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ. 1.50 லட்சம் மானியமாகவும், ரூ. 1.50 லட்சம் மதிப்பில் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அரசு மானியம் ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது. இதில், ஒரு லட்சம் ரூபாய் மருந்தக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர். விழாவுக்கு ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் இரா. லட்சுமணன், அன்னியூர் அ. சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా