பூவரசங்குப்பத்தில் மினி பேருந்து சேவை முதன்மைச் செயலா் ஆய்வு

71பார்த்தது
பூவரசங்குப்பத்தில் மினி பேருந்து சேவை முதன்மைச் செயலா் ஆய்வு
கிராம மக்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் மினி பேருந்து திட்டம் விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அதன்படி, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், விழுப்புரத்திலிருந்து, பூவரசங்குப்பம் வழியாக பில்லூர் வரை செல்லும் வழித்தடங்களை அரசு முதன்மைச் செயலரும், போக்குவரத்துத்துறை ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கிராம மக்களிடம் பேருந்து சேவை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து, வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் கூறியதாவது: மினி பேருந்து சேவையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனுமதி கிடைத்த பின்னர் இந்த வழித்தடத்தில் மினி பேருந்து சேவை தொடங்கப்படும் என்றனர். ஆய்வின்போது, போக்குவரத்து துணை ஆணையர் பாட்டப்ப சுவாமி, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி