விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்

70பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 24 இடங்களிலும், தொழில் முனைவோர் சார்பில் 5 இடங்களிலுமாக மொத்தமாக 29 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. இந்த இடங்களில் மருந்தகங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள் (மருந்துகள் பிரித்து அடுக்கி வைக்கப்படும் பகுதி), குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி இயந்திரம், மருந்துகளை வைப்பதற்கான பெட்டிகளைத் தயார் செய்தல் போன்ற பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பிப்ரவரி 24-இல் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்தகங்களும் விரைவில் தயார் நிலையில் உள்ளன என்றார் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி. 25% வரை தள்ளுபடி: வெளி மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகளின் விலையில் 25 சதவீதம் வரை முதல்வர் மருந்தகங்களில் தள்ளுபடி செய்து விற்கப்படும் என்றார் விஜயசக்தி. ஆட்சியர் ஆய்வு: விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதியில் முதல்வர் மருந்தகம் அமையவுள்ள இடத்தை ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி