விழுப்புரம் அருகே விபத்து.. இருவர் உயிரிழப்பு

63பார்த்தது
விழுப்புரம் வட்டம், பிடாகம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் பந்தல்ராஜ் (23), சத்தியமூர்த்தி மகன் தீனதயாளன் (21). தொழிலாளர்கள். நண்பர்களான இவர்கள் இருவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு பின்னர் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

கொளத்தூர் சாலை சந்திப்புப் பகுதியில் இவர்களது பைக் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தீனதயாளன், பந்தல்ராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி