விழுப்புரம் அடுத்த பொய்யாப்பாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் சிவக்குமார், 40; கூலி வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் ஸ்ரீதர், 45; இவர்களுக்கு சொந்தமாக பொய்யப்பாக்கத்தில் இருந்த 3 செண்ட் வீட்டு மனையை பிரித்துக்கொண்டனர். ஸ்ரீதர் அந்த இடத்தை விற்பனை செய்துவிட்டு, விழுப்புரத்தில் இடம் வாங்கி அங்கேயே வீடு கட்டியுள்ளார்.
பொய்யப்பாக்கத்தில் வசித்து வந்த தம்பி சிவக்குமாருக்கு திருமணமாகவில்லை என்பதால், தம்பி இடத்தையும் தருமாறு கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிவக்குமாரை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர். சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் ஸ்ரீதர், அவரது மனைவி பாக்கியலட்சுமி, 39; ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், சிவக்குமார், அவரது தாயார் பார்வதி, 70; மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.