விழுப்புரம் அருகே அரசு பேருந்து விபத்து 17 பேர் காயம்

73பார்த்தது
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த அய்யூா் அகரம் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சென்னை அடையாறு, இந்திரா நகரைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி சித்ரா (50) மற்றும் 16 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று மாற்றுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். இந்த விபத்தால் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி