விழுப்புரம் அடுத்துள்ள சித்தாத்தூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகள் ஆஷிகா (18) நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்வதாக கூறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.