கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், R. P. ரவிச்சந்திரன் ஏஜென்சி இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை திருக்கோவிலூர் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் எஸ். எஸ். வாசன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் LIC. C. முத்துக்குமாரசாமி, முன்னாள் ராணுவ வீரர் கல்யாணகுமார், R. P. ரவிச்சந்திரன், MG. காமராஜ், ராஜேஷ், RCC நிர்வாகிகள் சிதம்பரநாதன், தேவி பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், முரளி மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவம் பார்த்து 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.