
விழுப்புரம்: வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார், 50; அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். அதனால், சதீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஏழரை சவரன் நகைகள் திருடு போயிருந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.