'இந்தி' படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என RSS இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய அவர், "நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதமாக இருந்தது. ஆனால், இன்று அது சாத்தியமில்லை. ஆகையால், இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும், அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயப்படுத்தினால், எதிர்வினை இருக்கும் "என்று கூறியுள்ளார்.