
விக்கிரவாண்டி அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் மதுரப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா அரசி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் காசி விஸ்வநாதன், வல்லபராசு சிறப்புரையாற்றினர்.