விக்கிரவாண்டி: சீமான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

69பார்த்தது
விக்கிரவாண்டி: சீமான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
விக்கிரவாண்டி வட்டம், நேமூரில் 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை சீமான் அவதூறாக பேசியதாக, கஞ்சனூர் காவல் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் புகாரளித்தார். 

விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல், நீதிதுறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்தாண்டு அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சீமான் ஆஜரானார். நவம்பர் 4, 6ம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின் போது ஆஜராகாததையடுத்து, கடந்த ஜனவரி 21ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது வழக்குரைஞர் பேச்சிமுத்து, நீதிபதியிடம் சீமான் வராததற்கான காரணம் குறித்த மனுவைத் தாக்கல் செய்தார். 

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி சத்தியநாராயணன், சீமானுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும், விசாரணையில் ஆஜராகுவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவை கடந்த 6ம் தேதி நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். 

மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் தமது வழக்குரைஞர்களுடன் சீமான் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி