துரோகி என்றால் எடப்பாடி பழனிசாமி பெயர்தான் ஞாபகம் வரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுமாதிரி வருங்காலத்தில் தமிழ்நாட்டு வரலாற்றில் துரோகி என்றால் எடப்பாடி பழனிச்சாமியின் ஞாபகம் வரும். துரோகத்திற்கு ஒரு எம்பலம் போட வேண்டும் என்றால் அது பழனிசாமிதான்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.