
திருவலம் அருகே கோயிலில் திருடிய வாலிபர் கைது
திருவலம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் தீர்த்த பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இதுகுறித்து பகுதி மக்கள் திருவண்ணாமலை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (24) கைது செய்து காட்பாடி சப்- கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.