ராணிப்பேட்டையில் அமைந்துள்ள கால்நடை மருந்தகத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தினமும் எத்தனை கால்நடைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றன, பணியில் எத்தனை டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர் என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து கால்நடைகளுக்கு தாது உப்புக்களை அதன் உரிமையாளர்களிடம் ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். உதவி இயக்குனர் திருநாவுக்கரசு உடன் இருந்தார்.