ஆம்பூரில் கல்வித்துறை அமைச்சரை கண்டித்து சாலை மறியல்

83பார்த்தது
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான கண்டித்து
திமுகவினர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் இன்று தமிழக முதல்வர் மற்றும் எம்பிககள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் உருவ பொம்மை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்ய கோரியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஆனந்தன், நகரச் செயலாளர் ஆறுமுகம், மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி