சேலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள சாந்தி நகர் பகுதியை நோக்கி தொழிலதிபர்கள் அண்ணன் தம்பி இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் எம் சாண்ட் ஏற்றி கொண்டு சாலையை கடக்க முயன்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த சேலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முகமது யாகூப் அவரது அண்ணன் முகமது யூசுப் மற்றும் சாலையோரம் நின்று கொண்டிருந்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா(30)அவரது இரண்டு வயது குழந்தை ரிகான் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த டிராக்டர் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முகமது யூசுப் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
வாகன ஓட்டிகள் நிதானத்துடன் செல்வதற்கான சிக்னல் விளக்குகள் எரியாததே விபத்துக்கள் ஏற்பட காரணம் எனவும் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.