திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சார்ந்த சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியின் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழலை எதிர்த்தும் அதே போல தமிழகத்தை குப்பைத் தொட்டியாக கருதி மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதியில் கொட்டும் கேரளா அரசை கண்டித்தும் மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து விவசாயிகளை வஞ்சிக்கும் மேகதாது அணைக்கட்டும் கர்நாடக துணை முதல்வரை கண்டித்தும் அதற்கு உறுதுணையாக செயல்படுவது போல் உள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கண்டித்தும் கந்திலி ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளி சீருடையில் தந்தையுடன் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தியும் தன்னுடைய வீட்டின் மீது கருப்புக் கொடி காட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.