பள்ளி விழா மேடையில் ஏறி சினிமா பாடலை பாடிய நிலையில் சர்ச்சை
எங்கே போகிறது பள்ளிக்கல்வித்துறை?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பல்லி அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா 22. 3. 2025 அன்று நடைபெற்றுள்ளது.
இதில் தமிழகம் , மற்றும் அண்டை மாநிலங்களில் பல்வேறு நகை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபரான துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கணேஷ் என்பவர் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய வகையில் சினிமா பாடலை மேடையில் பாடி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி உள்ளார்.
கனணஷ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட வெளி மாவட்ட காவல் துறையினர் குற்ற வழக்கு தொடர்பாக இவரை கைவிலங்கிட்டு கைது செய்து அழைத்துச் செல்ல முயன்ற போது, போலீசாரை தாக்கி கை விலங்கை தனது ஆதரவாளர்கள் துணையுடன் வெல்டிங் மிஷின் மூலம் உடைத்து தப்பித்த ஓடி தலைமறைவான நபர் இந்நிலையில் இவர் பள்ளி மாணவ மாணவர்களிடையே பாடும் ஆபாச பாடல் கேளுங்கள். " மஜாவா இனிக்கிறேயே பஞ்சு மிட்டாயா? உன்னை பார்த்ததும் எனக்கு ஏறுது கிக்கு, நீதாண்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு " இப்படி நீள்கிறது அந்த பாடல் வரிகள்.
இதை அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், கலந்து கொண்ட கல்வி அலுவலர்கள் வேடிக்கை பார்த்து உள்ளனர்.