"அண்ணா திமுக இல்ல.. அமித்ஷா திமுக" - மாணிக்கம் தாகூர் எம்.பி.

56பார்த்தது
"அண்ணா திமுக இல்ல.. அமித்ஷா திமுக"  - மாணிக்கம் தாகூர் எம்.பி.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அண்ணா திமுக.. அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. விரைவில் அதற்கான இணைப்பு நடக்கும் என்று நினைக்கிறேன். அதிமுக வாக்காளர்கள் தவெகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தினால், அதிமுக காணாமல் போய்விடும். பாஜக செய்யும் தவறுகளுக்கு அதிமுகவினர் தான் தண்டிக்கப்படுவார்கள். கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள் இபிஎஸ்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி