இரட்டிப்பு பணம் தருவதாக 5 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

76பார்த்தது
ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ், கோகுல், நரசிம்மன் 3 பேரும் சந்தோஷ் மூலமாக சேலத்தை சேர்ந்த பெருமாளிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கரூரில் ஒருவர் இரட்டிப்பு பணம் தருவதாகவும், நகை பாதி விலையில் கொடுப்பதாக கூறி சந்தோஷ் கோகுல் நரசிம்மன் ஆகியோரை அழைத்துச் சென்று அவர்களிடம் 5 லட்சம் ரூ வாங்கி கொடுத்துவிட்டு 10 லட்ச ரூ கொடுப்பதாக சூட்கேசில் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு சேலம் வரை வந்து விட்டு பெருமாளை இறக்கி விட்டு சூட்கேஸில் உள்ள பணத்தை திறந்து பார்த்தபோது அதில் 2 நோட்டுகள் மட்டுமே பணமாகவும் இடையில் உள்ள அனைத்தும் வெறும் காகிதங்களாக வைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக காரை திருப்பி சேலத்துக்கு சென்று தங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமாள் உள்ளிட்ட இருவரை காரில் கடத்தி வந்துள்ளனர்.
ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த 10 நாட்களாக அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது

பெருமாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷை சேலம் காவல் துறையினர் செல்போன் மூலம் அடையாளம் கண்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி