மாதனூரில் 5 கிலோ. மீட்டர் தூரத்தை சிறப்பாக ஓடிய 9 வயது சிறுமி

66பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக ஒன்றிய மாணவர் அணி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாதனூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார் 500 அசோகன் ஒன்றிய துணைச் செயலாளர் ரவிக்குமார் மாவட்ட பிரதிநிதி தெய்வநாயகம், தொழிலதிபர் நவீன் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோவை கடலூர் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்
தே. பிரபாகரன் போட்டியை துவக்கி வைத்தார் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி