வாணியம்பாடியில் மிகவும் பழமை வாய்ந்த நாகாலம்மன் கோவிலில் புகுந்த நல்ல பாம்பு
பாம்பிற்கு பால் வைத்து வணங்கிய பக்தர்கள்.
வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னையாம்பேட்டை பாலாற்றை ஒட்டி அரசமரத்திற்கு அடியில் மிகவும் பழமை வாய்ந்த நாகாலம்மன் கோவில் மற்றும் வித்யா கணபதி கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று
திடீரென ஒரு நல்ல பாம்பு புகுந்து நீண்ட நேரமாக படமெடுத்து நின்றது. இதை பார்த்துக்கொண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நல்ல பாம்பிற்கு பால் வைத்து வழிபாடு செய்தனர். பிறகு அந்த பாம்பு அங்கிருந்து வெளியே சென்று அங்குள்ள புதருக்குள் சென்று மறைந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.