மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. 3,408 பேர் காயமடைந்துள்ளனர். 139 பேரைக் காணவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆபரேஷன் பிரம்மாவின் ஒரு பகுதியாக, 118 பேர் கொண்ட இந்திய ராணுவக் கள மருத்துவப் பிரிவு மற்றும் 60 டன் நிவாரணப் பொருட்களுடன் இரண்டு C-17 விமானங்கள் மியான்மருக்கு விரைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.