தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று (மார்ச் 30) சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொது தரிசனம், ரூ.100க்கான கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் வழக்கம்போல இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கோடை விடுமுறை காலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செவ்வாய், வியாழக்கிழமைக்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.