

ராணிப்பேட்டை: இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தனியார் கல்லூரி எதிரே உள்ள இரும்பு கடையில் இன்று (ஏப். 02) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து மேலும் பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.