ஆம்பூர் அருகே ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வட மாநில கூலி தொழிலாளி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில்குமார் பெங்களூர் நோக்கி தனது நண்பர்களுடன் கூலி வேலைக்காக செல்வதற்காக ரயிலில் வந்து கொண்டிருந்த நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் வந்தபோது படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த சுனில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். , தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உயிரிழந்த வட மாநில இளைஞர் சுனில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.