ஆம்பூரில் எருது விடும் மோதலில் மூன்று பேருக்கு கத்திக்குத்து

60பார்த்தது
ஆம்பூர் அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் வீதியில் எருது விடுவதில் இருதரப்பினரிடையே மோதல்.

இளைஞர்கள் மூன்று பேருக்கு கத்திக்குத்து.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் இன்று காலை 8: 30 மணியளவில் தொடங்கிய எருது விடும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்
விழாவில் வீதியில் காளைகளை முந்தி சென்று அவிழ்த்து விடுவது தொடர்பாக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தியால் குத்தியதில் ஆம்பூர் ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ், தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மற்றும் நவயோகன் ஆகியோர் படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சதீஷ் மற்றும் குபேந்திரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் எருது விடும் திருவிழாவிற்காக மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஒவ்வொரு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதிப்பதால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக காளைகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி