திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வீரவர் கோவில் பகுதியில், உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டிருந்த போது, திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 15 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், விபத்துக்குள்ளான வேனை கிரேன் இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
அதனை தொடர்ந்து மாற்று வாகனம் மூலம் இளைஞர்கள் சுற்றுலா செல்லாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பினர்,
இந்த சுற்றுல்லா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
அதே போல் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் முத்து என்பவர் காயமடைந்த நிலையில், அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.