வேலூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (33) இவர் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியர். நேற்று பணி முடிந்து கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் சீதாலட்சுமியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.