ஆம்பூர் - Ambur

திருப்பத்தூர்: காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு பதிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு பாஜக அரசு அமலாக்கதுறையை வைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு திருப்பத்தூர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  அப்போது போலீசார் முன்கூட்டியே தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜெயபிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.  மேலும் கட்சியின் ஆம்பூர் நகர தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சபியுல்லா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்ட பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా