டெல்லி நொய்டாவைச் சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டது. தொடர்ந்து, டேட்டிங் செயலி மூலம், ஹைதராபாத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில், டெலிகிராம் வாயிலாக ரூ.3.20 லட்சத்தை ஒரு செயலியில் முதலீடு செய்தார். இதன்மூலம் அவருக்கு ரூ.24,000 லாபம் கிடைத்தது. காதலியை நம்பி இதேபோல் பல செயலிகளில் ரூ.6.3 கோடி முதலீடு செய்த நிலையில் காதலி பணத்துடன் எஸ்கேப் ஆகியுள்ளார்.