திருவண்ணாமலையில் காவலர் வீரவணக்க நாள்
கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு வீரர்களின் நினைவாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அணுசரிக்கப்படுகிறது. அப்போது, நாடு முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்துக்கு, எஸ்பி சுதாகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், 108 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், கலால் பிரிவு டிஎஸ்பி அண்ணாதுரை, ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.