திருவண்ணாமலை மாவட்டம் ,
செங்கம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு நகை கடன் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு துண்டு பிரசுரம், ஒளிபெருக்கி மூலமாகவோ எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் நகை கடன் அட்டை கணினியில் ஏற்றப்படவில்லை என அவர்களை அழைத்து நகை கடன் புதுப்பித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வங்கி ஊழியர்களை விசாரித்தபோது வங்கியில் பணி புரியும் உதவி மேலாளர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் முன்னுக்கு பின்னாக பேசியதால் அவர்களை வங்கியில் இருந்து வெளியேற்றி வங்கி கதவை மூடினார்கள். ஏற்கனவே பொதுமக்களிடம் வங்கியில் இருந்து பேசுவதாக ஏதேதோ கூறி அவர்களிடம் ஏடிஎம் கார்டில் உள்ள 14 இலக்கு எண்களை தெரிவிக்கும் படியும் உங்களுக்கு ஓடிபி வரும் அதை தெரிவிக்குமாறு கேட்டு பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் ஒரு பக்கம் இருக்க வங்கியில் பணிபுரியும் வங்கி பணியாளர்களே இவ்வாறு நடந்து கொள்வதால் பணியாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..