யாருமே உள்ளே போகக் கூடாது என்கிற கெடுபிடி வேங்கைவயலில் நிலவுகிறது என்றும் இது ஜனநாயக உரிமையை பறிக்கும் நடவடிக்கை எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் நேற்று (ஜன., 27) நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், வேங்கைவயல் மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். இந்த குற்றப்பத்திரிக்கையால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு தனது முடிவை அரசு மாற்ற வேண்டும். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.