விஜயுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அவர் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லையே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார், "விஜய் ஒரு கட்சி ஆரம்பித்து அவர் கொள்கைகளை பிரகடப்படுத்துகிறார். நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். எம்ஜிஆர் தவிர்க்க முடியாத சக்தி. விஜய் படத்தில் எம்ஜிஆர் பட பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று கூறியுள்ளார்.