வயிறு மற்றும் வாய்களில் புண் இருப்பவர்களுக்கு கசகசா அருமருந்தாகும். கசகசாவை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை 1 ஸ்பூன் இரவு நேரங்களில் எடுத்துக் கொண்டு வந்தால் வாய், வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். அல்சர் குணமாகும். சரியாக தூக்கம் வராதவர்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.