செங்கம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

54பார்த்தது
செங்கம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நெடுஞ்சாலை உதவி கோட்ட அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் புதிய பஸ் நிலையம் என முக்கிய சாலைகளின் வழியாக சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். 

அதேபோல் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்கம் மூன்று வழி சந்திப்பு ஜங்ஷன் சாலையில் பேரணி நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி உதவி பொறியாளர் பிரீத்தி பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி