பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தேசிய தலைவர் அணில் குமார் ஜெயின், திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். அவருக்கு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலருமான முத்தழகன் தலைமையில், ஒருங்கிணைந்த மாவட்ட சாரண இயக்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.