2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதத்தில் தனது பயணத்தை தொடங்கும் இபிஎஸ், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி வரும் பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.