இன்று வயநாடு செல்கிறார் பிரியங்கா காந்தி

56பார்த்தது
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி இன்று (ஜன., 28) வயநாடு செல்கிறார். புலி தாக்கியதில் உயிரிழந்த ராதா என்ற பெண்ணின் வீட்டிற்கு வருகை தந்து, உறவினர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார். காலை 11.30 மணிக்கு கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த பின் சாலை மார்க்கமாக வயநாடு சென்றடைவார். தொடர்ந்து புலி தாக்கி உயிரிழந்த ராதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட காங்கிரஸ் மாவட்ட முன்னாள் பொருளாளர் என்.எம்.விஜயன் வீட்டிற்கு செல்லவுள்ளார்.

தொடர்புடைய செய்தி