திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஜன. 28) காலை அன்பு என்பவர் ஜிம்முக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. வைகுண்ட ஏகாதசி பரிவேட்டை விழா தொடர்பான மோதலால் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.