திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயிலின் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நேற்று (ஜனவரி 27) மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில், நந்தி பகவான்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு சிவனை வழிபட்டனர். இதையடுத்து, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.