விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அங்கிருந்த போராளிகளின் உருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். விழுப்புரத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கவுள்ளார்.