டிரம்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு

65பார்த்தது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். புதிய அதிபராக டிரம்ப் கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற நிலையில், சர்வதேச அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இணைந்து செயல்படுவோம் என்று டிரம்பிடம் மோடி உறுதி அளித்துள்ளார். மோடியின் எக்ஸ் பதிவில், டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க 2வது முறை வெற்றிக்கு வாழ்த்துகள். பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி