மீந்து போன சப்பாத்தியை வைத்து ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் செய்து கொடுக்கலாம். சப்பாத்தியை சுருட்டி அதை மெலிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வாணலியை சூடு செய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனவுடன் முட்டைப் பொரியல், சப்பாத்தி சேர்த்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி.